நலன்புரி முகாம்களில் உள்ளவர்களுக்காக கீரிமலையில் வீட்டுத் திட்டம்: ஊடகங்களுக்கு தெளிவூட்டல்

நலன்புரி முகாம்களில் உள்ளவர்களுக்காக கீரிமலையில் வீட்டுத் திட்டம்: ஊடகங்களுக்கு தெளிவூட்டல்

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2016 | 7:13 pm

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்காக கீரிமலையில் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மமேஸ் செனவிரத்னவினால் இந்தத் தெளிவூட்டல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கீரிமலையில் நிர்மாணிக்கப்படும் வீடுகளின் அபிவிருத்திப் பணிகள் குறித்த கண்காணிப்பும் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியுடன் கீரிமலையில் விடுவிக்கப்பட்ட காணியில் சுமார் 40 ஏக்கரில் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

யாழ். மாவட்டத்திலுள்ள 31 நலன்புரி முகாம்களில் காணிகளற்ற நிலையில் தங்கியுள்ள மக்களுக்காக காங்கேசன்துறையிலுள்ள சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது.

குறித்த காணியில் 100 குடும்பங்களுக்கான வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்