சிகரட்டுகளுக்கான வரி அதிகரிப்பு பிரேரணை பொருளாதார செயற்பாட்டு அமைச்சரவை உப குழுவிடம் சமர்ப்பிப்பு

சிகரட்டுகளுக்கான வரி அதிகரிப்பு பிரேரணை பொருளாதார செயற்பாட்டு அமைச்சரவை உப குழுவிடம் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2016 | 7:27 pm

சிகரட்டுகளுக்கான வரி அதிகரிப்பு பிரேரணை, பொருளாதார செயற்பாட்டு அமைச்சரவை உப குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

மேலும், அடுத்த வாரமளவில் உப குழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்