வவுனியா சாளம்பைக்குளம் வீடமைப்புத் திட்டத்தில் முறைகேடு; மக்கள் குற்றச்சாட்டு

வவுனியா சாளம்பைக்குளம் வீடமைப்புத் திட்டத்தில் முறைகேடு; மக்கள் குற்றச்சாட்டு

வவுனியா சாளம்பைக்குளம் வீடமைப்புத் திட்டத்தில் முறைகேடு; மக்கள் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2016 | 8:45 pm

வவுனியா சாளம்பைக்குளம் வீடமைப்புத் திட்டத்தில் வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து 2010 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் அமைந்துள்ள பம்பைடுவுக்கு முன்பாக உள்ள பகுதியில் பல ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குடியேற்றுவதாக தெரிவித்து சாளம்பைக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 685 குடும்பங்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இதன்போது புத்தளம் இக்கிரிக்கொல்லாவ ஆகிய பகுதிகளில் நிரந்தர வீடுகள் மற்றும் காணிகள் உள்ள பலருக்கும் வீடுகள் வழங்கப்பட்டதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

341 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், 250 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டமும் வழங்கப்பட்டு வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சாளம்பைக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அவர்களது குடும்பப் பதிவுகளும் இடம்பெற்றன.

எனினும் இந்த வீடமைப்புத் திட்டத்தில் குடியேற்றப்பட்ட அநேகமானவர்கள் இன்று வீடுகளில் வசிக்கவில்லை.

இதனால் பல வீடுகள் பூட்டப்பட்டு பாழடைந்த வீடுகளாக மாறிப்போயுள்ளதுடன் சிலரது வீடுகள் மந்து பற்றைகளாலும் மூடப்பட்டுள்ளன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து நலன்புரி முகாம்களில் வசித்து வருகின்ற நிலையில், அரசியல் நோக்கங்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்ட வீடுகள் பயன்பாடற்று காணப்படுகின்றமை கவலைக்குரியதாகும்.

பூந்தோட்டம் முகாமில் உள்ள மக்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்படாத நிலையில் பல துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றனர்.

பூந்தோட்டம் முகாமிலிருந்து, சாளம்பைக்குளத்திற்கு சுமார் பத்து கிலோமீற்றர் தூரமே உள்ளது. முகாம்களில் வசிக்கும் தமது மீள்குடியேற்றம் தொடர்பில் யாரும் இதுவரை கவனத்தில் கொள்ளவில்லை என மக்கள் வசனம் தெரிவிக்கின்றனர்.

திட்டங்கள் முன்னடுக்கப்படும் போது மக்களின் நலன்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாமை ஏன்?

யுத்தினால் அநாதரவாக்கப்பட்டு பலவருடங்களாக வாழ்ந்துவரும் இந்த மக்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்பட்டு மீள்குடியேற்றப்பாடமை தொடர்பில் தமிழ் அரசியல் கரிசனை கொள்ளாதது ஏன்?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்