வசீம் தாஜுடீனின் மரண பரிசோதனை அறிக்கையை வழங்க 3 வருடங்கள் சென்றன – பிரதி சொலிசிஸ்டர் நாயகம்

வசீம் தாஜுடீனின் மரண பரிசோதனை அறிக்கையை வழங்க 3 வருடங்கள் சென்றன – பிரதி சொலிசிஸ்டர் நாயகம்

வசீம் தாஜுடீனின் மரண பரிசோதனை அறிக்கையை வழங்க 3 வருடங்கள் சென்றன – பிரதி சொலிசிஸ்டர் நாயகம்

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2016 | 7:06 pm

றக்பி வீரர் வசீம் தாஜுடீனின் மரண பரிசோதனையை மேற்கொண்ட நீதிமன்ற வைத்தியர் ஆனந்த சமரசேகரவுக்கு அது தொடர்பான அறிக்கையை வழங்குவதற்கு மூன்று ஆண்டுகள் சென்றதாக பிரதி சொலிசிஸ்டர் நாயகம் திலான் ரத்னாயக்க இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனந்த சமரசேகரவுக்கு பிணை வழங்குவதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்த போதே கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையிலேயே பிரதி சொலிசிஸ்டர் நாயம் இதனைக் கூறியுள்ளார்.

உடல் பாகங்களை குளிரூட்டியில் வைத்திருந்த போது அவை காணாமல் போனமைக்கு நீதிமன்ற வைத்தியருக்கு தொடர்புள்ளதாகவும், ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதன் போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு தற்போது நீதிமன்ற வைத்திய அதிகாரியே பொறுப்பு என பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்திரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வைத்தியர் ஆனந்த சமரசேகரவை கைது செய்வது அநீதியானது எனவும் அத்துடன் வசீம் தாஜுடீனின் உடற்பாகங்கள் பொதுச்சொத்து அல்லவென்பதால் அவருக்கு பிணை வழங்க முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.

இரு தரப்பினும் இது தொடர்பில் எதிர்வரும் 09 ஆம் திகதி எழுத்து மூல வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்