முழங்காவில் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள அரச காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை

முழங்காவில் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள அரச காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை

முழங்காவில் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள அரச காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2016 | 1:08 pm

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள 2 ஏக்கர் அரச காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கிராம சேவையாளரூடாக அடையாளப்படுத்தப்படும் காணி இன்று பொறுப்பேற்கப்படவுள்ளதாக பூநகரி பிரதேச செயலாளர் சி.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை பொன்னாவெளி பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்த 4.5 ஏக்கர் காணியை பொறுப்பேற்றுள்ளதாகவும் பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.

அதற்கமைய பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த 6.5 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரிடமிருந்து மீள கையேற்கும் காணி, அரச காணி எனவும், அவற்றில் தனியாருக்கு சொந்தமான காணிகள் காணப்படவில்லை எனவும் பூநகரி பிரதேச செயலாளர் சி.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்