பண்டாரகம வர்த்தகர் ஒருவர் திருகோணமலையில் காணாமற்போனமை தொடர்பில் விசாரணை

பண்டாரகம வர்த்தகர் ஒருவர் திருகோணமலையில் காணாமற்போனமை தொடர்பில் விசாரணை

பண்டாரகம வர்த்தகர் ஒருவர் திருகோணமலையில் காணாமற்போனமை தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2016 | 7:21 pm

பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் திருகோணமலையில் காணாமற்போயுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பண்டாரக – அடலுகம – மாரவ பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் நஷ்ரீன் என்ற வர்த்தகர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மஹரகமவுக்குச் செல்வதாக கூறி நேற்று முன்தினம் காலை 10.30 அளவில் அவர் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மஹரகமவில் இருந்து அரச வங்கி ஒன்றில் தங்காபரண ஏலத்தில் பங்கேற்பதற்காக திருகோணமலை நோக்கி குறித்த வர்த்தகர் சென்றுள்ளார்.

மூன்று கார்களில் 13 பேர் இவ்வாறு திருகோணமலைக்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏலம் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்பத்தில் இந்த வர்த்தகர் அங்கிருந்ததுடன் பின்னரே காணாமல் போயுள்ளார் .

மொஹமட் நஷ்ரீன் காணாமல் போகும் சந்தர்பத்தில் அவரிடம் 2 மில்லியன் ரூபா இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

35 வயதான மொஹமட் நஷ்ரீன் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்