சம்மாந்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சம்மாந்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சம்மாந்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2016 | 8:20 am

சம்மாந்துறை வன்களாவடி பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்