கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியைகளில் 3000 இற்கும் அதிகமானோர் பங்கேற்பு

கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியைகளில் 3000 இற்கும் அதிகமானோர் பங்கேற்பு

கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியைகளில் 3000 இற்கும் அதிகமானோர் பங்கேற்பு

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2016 | 12:49 pm

பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த ஐந்து இளைஞர்களின் இறுதிக் கிரியைகள் நேற்று நடைபெற்றன.

உயிரிழந்த ஐவரில் நால்வர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பதுடன், மற்றைய இளைஞன் லண்டனில் பிறந்த இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவராவார்.

18 வயதான கெனுஜன் சத்தியநாதன், 22 வயதான கோபிகாந்தன் சத்தியநாதன் மற்றும் நிதர்ஷன் ரவி, 23 வயதான இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா, 27 வயதான குருஷாந் ஶ்ரீதவராஜா ஆகியோரே உயிரிழந்தனர்.

கடந்த மாதம் 24ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்த, நண்பர்களான ஐந்து இளைஞர்களின் இறுதிக் கிரியைகள் சமய முறைப்படி, வின்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றன.

இறுதிக்கிரியைகளுக்காக, இணையத்தளமொன்றினால் 9000 பவுண்ட்ஸூக்கும் அதிகமான நிதி சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கிரியைகளில் 3000 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தென்கிழக்கு இலண்டனிலிருந்து, கெம்பர் சேண்ட்ஸ் கடற்கரைக்கு ஒரு நாள் சுற்றுலாவுக்கு சென்ற இளைஞர்களே உயிரிழந்தனர்.

இதனையடுத்து, உயிர்பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அசமந்தப் போக்கு தொடர்பில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்