காரின் நிழல் எல்லைக் கோட்டை தாண்டி விழுந்ததால் அதன் ஓட்டுனருக்கு அபராதம்; ரஷ்யாவில் சம்பவம்

காரின் நிழல் எல்லைக் கோட்டை தாண்டி விழுந்ததால் அதன் ஓட்டுனருக்கு அபராதம்; ரஷ்யாவில் சம்பவம்

காரின் நிழல் எல்லைக் கோட்டை தாண்டி விழுந்ததால் அதன் ஓட்டுனருக்கு அபராதம்; ரஷ்யாவில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2016 | 4:43 pm

ரஷ்யாவில் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் நிழல் குறிப்பிட்ட எல்லைக் கோட்டை தாண்டி விழுந்ததால் அந்த ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ஓட்டுனர் ஒருவர் தமது காருடன் ரிங் ரோடு பகுதியில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது வாகனமானது சாலையின் நெடுகே போடப்பட்டிருந்த கோட்டின் அருகே சென்றுள்ளது. ஆனால் அந்த கோட்டை வாகனம் தாண்டவில்லை.

இருப்பினும் அவரது வாகனத்தின் நிழல் குறிப்பிட்ட கோட்டினை தாண்டியதால் அங்கு பொருத்தப்பட்டிருந்த கமெரா அதை படம் பிடித்து விதி மீறல் என்று அபராதம் விதிக்கும் படி கட்டளை அனுப்பியுள்ளது.

வாகனத்தின் நிழல் தாண்டினாலே அபராதம் விதிக்கப்படும் உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று, பாதிக்கப்பட்ட அந்த நபர் சமூகவலைதளத்தில் பதிந்துள்ளார். மட்டுமின்றி அபராத தொகையை செலுத்த வலியுறுத்தி இவருக்கு அனுப்பியுள்ள புகைப்படத்தையும் அத்துடன் இணைத்து பதிவேற்றியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்