இந்துக்களால் விநாயகர் சதுர்த்தி இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது

இந்துக்களால் விநாயகர் சதுர்த்தி இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது

இந்துக்களால் விநாயகர் சதுர்த்தி இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2016 | 8:42 pm

விக்கினங்களை வேரறுக்கும் விநாயகப் பெருமான் அவதரித்த நாளாக போற்றப்படும் விநாயகர் சதுர்த்தி இன்றாகும்.

இந்துக்களின் முதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத்தை, உலக வாழ் இந்துக்கள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்துக்களின் முழுமுதற் கடவுளான சிவன் பார்வதி இன் முதற்பிள்ளையான பிள்ளையார் ஆவணி சதுர்த்தியில் அவதரித்தாக புராணங்கள் கூறுகின்றன.

காணபத்திய வழிபாட்டில் மாதாந்தம் வருகின்ற சதுர்த்தியினை விட, ஆவணி மாத சதுர்த்தி சிறப்பிடம் பெறுகின்றது.

கணங்களின் அதிபதியாகவும் விக்கினங்களை தீர்ப்பவராகவும் முதல் கடவுளாகவும் விளங்கும் விநாயகரின் முதன்மை விரதமாக ஆவணி சதுர்த்தி விளங்குகின்றது.

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகின்ற விநாயகர் சதுர்த்தியானது, தனிச்சிறப்பு வாய்ந்தது என இந்துக்கள் நம்புகின்றனர்.

விநாயக சதூர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் இன்று சிறப்பு வழிபாடுகளிலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்