இத்தேகல கிராமவாசிகளின் துன்பத்தை தீர்க்கும் முனைப்பில் மக்கள் சக்தி 100 நாட்கள்

இத்தேகல கிராமவாசிகளின் துன்பத்தை தீர்க்கும் முனைப்பில் மக்கள் சக்தி 100 நாட்கள்

இத்தேகல கிராமவாசிகளின் துன்பத்தை தீர்க்கும் முனைப்பில் மக்கள் சக்தி 100 நாட்கள்

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2016 | 9:06 pm

அதிவேக நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள்….

இந்த பாரிய அபிவிருத்திகளின் வாசனையை நுகர்கின்ற நகரங்களில் வாழும் நீங்கள் எமது நாட்டில் வாழும் ஒரு சாரார் பயணிக்க பாதையின்றி பரிதவிக்கின்றனர். பிரதான வீதிகளுக்கு பதிலாக அவர்களுக்கிருப்பது ஒற்றையடிப்பாதைகளே

மேம்பாலங்களுக்கு பதிலாக இருப்பது தூருப்பிடித்த இரும்புகளால் அமைந்த பாலங்கள்.

இரத்தினபுரி ஹந்தகிரிகொட இத்தேகல கிராமவாசிகள் தமது வாழ்க்கையை உயிர் அச்சுறுத்தலிடனேயே கடத்தி வருகின்றனர்.

7 தசாப்தங்களாக இத்தேகல பகுதியில் வாழும் இந்த மக்கள் தமது வீட்டுத் தோட்டத்தில் அறுவடையை விற்பனை செய்தே தம் வாழ்வை நகர்த்தி வருகின்றனர்.

அவர்களது வீட்டுத் தோட்ட செய்கைகளும் யானைகளின் அட்டகாசத்தால் அழிக்கப்படுகின்றன. அதனை விட அவர்களுக்கு சிரமமானது கடுபத் ஓயவை கடப்பது தான். தமது கிராமத்துக்குள் பிரவேசிப்பதற்கான ஒரே பாதை இந்த பாலத்தை அண்மித்தே காணப்படுகின்றது.

மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட பாலத்தினாலே இவர்கள் தமது போக்குவரத்தை மேற்கொள்கின்றனர். அது வெறுமனே பயணம் மாத்திரம் அல்ல மரணத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான போராட்டமே அது.

ஒவ்வொருவரும் இதில் விழுந்து இறப்பதற்கு முன்னர் பாலத்தை செய்து தருமாறு மாத்திரமே அந்த கிராமமக்கள் வேண்டி நிற்கின்றனர்.

கடுபத் ஒயவுக்கு மேலாக மரணத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே போராடும் இந்த மக்களது துன்பத்தை தீர்ப்பதற்கு இது உகந்த காலமல்லவா


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்