ஆறாவது நாளாகவும் தொடரும் பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்

ஆறாவது நாளாகவும் தொடரும் பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்

ஆறாவது நாளாகவும் தொடரும் பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2016 | 8:44 pm

இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கிளிநொச்சி பரவிபாஞ்சான் கிராம மக்கள் ஆறாவது நாளாகவும் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 31 ஆம் திகதி பரவிபாஞ்சான் மக்கள் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சில ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், எஞ்சிய காணிகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என கோரி பரவிபாஞ்சான் மக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த மாதம் 17 ஆம் திகதி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, தமது காணி முழுமையாக விடுவிக்கப்படும் வரை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

பரவிபாஞ்சான் கிராம மக்களின் கோரிக்கை தொடர்பில் கரைச்சி பிரதேச செயலாளர் கோபாலபிள்ளை நாகேஸ்வரனிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய, காணி விடுவிப்பு தொடர்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், பரவிபாஞ்சான் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட ஏழரை ஏக்கர் காணியில் மக்களை மீள குடியேறுவதற்கான அனுமதி கட்டம் கட்டமாக வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய ஆவணங்களை ஆராய்ந்து தற்போது 8 குடும்பங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மீள்குடியேற கூடிய ஏனையவர்கள் தொடர்பிலும் தற்போது ஆராயப்படுவதாகவும் கரைச்சி பிரதேச செயலாளர் கோபாலபிள்ளை நாகேஸ்வரன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்