ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த சம்மேளனம் ஆரம்பம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த சம்மேளனம் ஆரம்பம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த சம்மேளனம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2016 | 3:31 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த சம்மேளனம் குருணாகல் மாளிகாப்பிட்டிய மைதானத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் அங்கத்தவர்கள் பலர் சம்மேளத்தில் பங்குபற்றியுள்ளனர்.

சர்வமத ஆசிர்வாதத்துடன் சற்று நேரத்திற்கு முன்னர் 65 ஆவது வருடாந்த சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டது.

வருடாந்த சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ ஒளிபரப்பு சிரச தொலைக்காட்சியில் ஔிபரப்பப்படுகிறது.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது அதன் நேரடி ஒலிப்பரப்பு சிரச எப் எம் அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்படவுள்ளது.

www.newsfirst.lk என்ற எமது இணையத்தளத்தின் ஊடாகவும் NewsfirstSL என்ற எமது பேஸ்புக் பக்கத்தினூடாகவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனம் தொடர்பான நேரடி காட்சிகளை நீங்கள் காண முடியும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்