ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த சம்மேளனம் இன்று

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த சம்மேளனம் இன்று

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த சம்மேளனம் இன்று

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2016 | 9:29 am

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த சம்மேளனம் இன்று குருணாகல் மாளிகாபிட்டியவில் நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் மாநாட்டை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.

குருணாகல் நகரில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான மக்கள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய சம்மேளனத்தில் பங்கேற்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்

இலங்கை போக்குவரத்து சபையால் அனுமதிக்கப்பட்ட பஸ்களுடன் தனியார் பஸ்களும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த சம்மேளனத்துக்காக போக்குவரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதேவேளை குருணாகல் மாளிகாப்பிட்டியில் நடைபெறும் சம்மேளனத்திற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 1500 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குருணாகலின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹேஷ் சேனாரத்ன கூறினார்.

இதற்கு அமைவான இன்று நண்பகல் 12 மணியிலிருந்து குருணாகல் நகரை அண்மித்த பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் மஹேஷ் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்திற்கு வருகை தருவதற்காக 1500 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இந்த பஸ்களுக்கு 19 மில்லியன் ரூபா அறிவிடப்படவுள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் ரமணி சிறிவர்த்தன கூறினார்.

அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த சம்மேளனம் இன்று பிற்பகல் 2 மணியிலிருந்து சிரச தொலைக்காட்சி ஊடாக நேரடியாக ஔிப்பரப்பு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்