மாத்தளையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பிரேதப் பரிசோதனை இன்று

மாத்தளையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பிரேதப் பரிசோதனை இன்று

மாத்தளையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பிரேதப் பரிசோதனை இன்று

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2016 | 11:36 am

மாத்தளை பெரிய செல்வகந்தைப்பகுதியில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

நேற்று (03) மாலை பெரிய செல்வகந்த பகுதியில் உள்ள நீரோடையில் தமது நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

தமது மேலதிக வகுப்புக்கு சென்று வீடு திரும்பும் வழியில் தனது 5 நண்பர்களுடன் நீராடச் சென்ற 14 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் மாத்தளையின் தம்பலகல்ல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் சடலம் மாத்தளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கந்தேநுவர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்