மன்னார் பள்ளிமுனையில் ஹெரோயின் கடத்திய இந்திய பிரஜை உள்ளிட்ட 5 இலங்கையர்கள் கைது

மன்னார் பள்ளிமுனையில் ஹெரோயின் கடத்திய இந்திய பிரஜை உள்ளிட்ட 5 இலங்கையர்கள் கைது

மன்னார் பள்ளிமுனையில் ஹெரோயின் கடத்திய இந்திய பிரஜை உள்ளிட்ட 5 இலங்கையர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2016 | 9:53 am

மன்னார் பள்ளிமுனை பகுதியில் 2.24 கிலோ கிராம் ஹெரோயின் கடத்திய ஒரு இந்தியப் பிரஜை மற்றும் அதனுடன் தொடர்புடைய 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை கடற்படை இரகசியப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய வடமேல் கடற்படைப் பிரிவிற்கு சொந்தமான மன்னாரில் அமைந்துள்ள தளத்தின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்தே சந்தேகநபர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் ஹெரோயின் ஆகியன சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வவுனியா பொலிஸ் போதைப்பொருள் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்