மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2016 | 11:03 am

மட்டக்களப்பு சித்தாண்டி சந்தனமடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிறுமியின் சகோதரியும் காயமடைந்த நிலையில் மாவடிவேம்பு வைத்தியசாலையில் சிகிச்கைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவடிவேம்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 மற்றும் 9 வயதான சிறுமிகளே யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

சித்தாண்டி ஈரளக்குளத்தில் உள்ள தமது பாட்டி வீட்டிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே இரண்டு சிறுமிகளையே காட்டு யானை தாக்கியுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு சிறுமிகளும் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இதே இடத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவம் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்