குருணாகலில்  இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு

குருணாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு

குருணாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2016 | 2:04 pm

குருணாகல் பொத்துஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் ஒன்றுக்கொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள் 10 வயதான சிறுவனொருவனும் ஒரு வயதான குழந்தையொன்றும் அடங்குகின்றனர்.

அத்துடன் 28 வயதான முச்சக்கர வண்டியின் சாரதியும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்