உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் நாடு திரும்பினார்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் நாடு திரும்பினார்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் நாடு திரும்பினார்

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2016 | 11:43 am

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட், குழுவினர் நேற்று (03) இரவு நாடு திரும்பினர்.

சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் பிரதமர் நேற்று இரவு 11 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் அதிகாலை சிங்கப்பூர் சென்றிருந்தனர்.

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க புதிய சட்டக்கட்டமைப்பொன்றின் அவசியம் குறித்து பிரதமர் ரணில்விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
தமது விஜயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ,அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்