அன்னை தெரேசாவிற்கு புனிதர் பட்டம்

அன்னை தெரேசாவிற்கு புனிதர் பட்டம்

அன்னை தெரேசாவிற்கு புனிதர் பட்டம்

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2016 | 12:45 pm

அன்னை தெரேசாவிற்கு புனிதர் பட்டம் வழங்குவதையொட்டி வத்திக்கான் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

போப் பிரான்சிஸ், அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் இந்த நிகழ்வில்,உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

போப் பிரான்சிஸ், அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் இந்த நிகழ்வில்,உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

இதில் அன்னை தெரசா சேவையாற்றிய மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி சபையின் தற்போதைய தலைவர் மேரி பிரேமா, கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசோசா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட மத்திய அரசுக் குழு கலந்து கொள்கிறது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தலைமையில் இரண்டு குழுக்களும் விழாவில் பங்கேற்கின்றன.

மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், வத்திக்கான் விழாவில் பங்கேற்கின்றனர்.

_91019834_hanging

_91019836_tomb

_91019994_035090876-1

_91019999_035090858-1

1

அன்னை தெரேசா பற்றி……

ஐரோப்பாவின் மாசிடோனியாவில் உள்ள ஸ்கோப்ஜே என்ற நகரில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அன்னை தெரேசா பிறந்தார்.

8 வயதில் தந்தையை இழந்து தாயாரால் வளர்க்கப்பட்ட இவர் இளம் வயதிலேயே துறவறம் மீது விருப்பம் கொண்டார்.

இதனால் 18 வயதில் லொராட்டா சகோதரிகளின் சபையில் சேர்ந்தார், இந்தியாவில் ஏழை பள்ளி குழந்தைகளுக்கு கல்வி போதிக்க விரும்பினார்.

இதற்காக 1929 ஆம் ஆண்டு இந்தியா வந்தார் மேற்கு வங்க மாநிலம் டார்ஜி லிங்கில் துறவற பயிற்சியை தொடங்கினார் 1937 ஆம் ஆண்டு உறுதி மொழி எடுத்து துறவறம் மேற்கொண்டார்.

1950 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக ‘மி‌ஷனரிங் ஆப் சாரிட்டிஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார்.

மறு ஆண்டில் அவர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ குடிமகள் ஆனார், அன்பு கருணையுடனும், தாயுள்ளத்துடனும் தொண்டு செய்து வந்த அன்னை தெரேசா மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அவரது சேவையை போற்றி மத்திய அரசு 1980 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது முன்னதாக 1979 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

உடல் நலக்குறைவால் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி தனது 87 ஆவது வயதில் அன்னை தெரேசா இயற்கை எய்தினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்