இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 150 வருடங்கள் பூர்த்தி

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 150 வருடங்கள் பூர்த்தி

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 150 வருடங்கள் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2016 | 11:06 am

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 150 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இதனை முன்னிட்டு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொண்டாட்ட வைபவம் நடைபெறவுள்ளது.

சபநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரும் இந்த வைபவத்தில் பங்குபற்றவுள்ளனர்.

150 ஆவது பொலிஸ் தினத்தை பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக மைதானத்தில் விமரிசையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த வைபவத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும், பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொண்டாட்ட வைபவத்தில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன், கலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் முறையான பொலிஸ் சேவை 1866 ஆம் ஆண்டின் செப்டெம்பர் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

முதலாவது பொலிஸ் மாஅதிபராக வில்லியம் ரொபர்ட் கெம்பெல் நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது நாட்டில் 47 பொலிஸ் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், 585 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையாற்றினர்.

தற்போதைய பொலிஸ் மாஅதிபரின் கீழ், சகல தரங்களையும் சேர்த்து 84,000 இற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்