Miss Intercontinental அணிவகுப்பை நடத்த ஆயத்தமாகிறது இலங்கை

Miss Intercontinental அணிவகுப்பை நடத்த ஆயத்தமாகிறது இலங்கை

Miss Intercontinental அணிவகுப்பை நடத்த ஆயத்தமாகிறது இலங்கை

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 10:03 pm

எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி Miss Intercontinental அணிவகுப்பை நடத்துவதற்கு இலங்கை ஆயத்தமாகிவருகின்றது.

இலங்கையில் நடத்தப்படும் முதலாவது சர்வதேச அலங்கார அணிவகுப்பு இது என்பதுடன், தெற்காசியாவில் 20 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக நடத்தப்படும் ஒரு பிரம்மாண்ட அணிவகுப்பு இதுவாகும்.

45 ஆவது Miss Intercontinental அணிவகுப்பு இம்முறை “The Fairy Tale” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

உலகளாவிய ரீதியில் உள்ள 70 இற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இம்முறை அணிவகுப்பில் இணைந்துகொள்ளவுள்ளதுடன், 60 இற்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கையில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளன.

3,60,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய வெற்றிக் கிரீடத்திற்கு “Oriental Holy Water” எனப் பெயரிப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டின் Miss Intercontinental ஆக ரஷ்யாவைச் சேர்ந்த வலன்டினா ரசுலோவா வெற்றிவாகை சூடியமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அணிவகுப்பு குறித்த விழிப்புணர்வை எற்படுத்தும் நோக்கில் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும்
இடம்பெற்றது.

இந்த கவர்ச்சிகரமான நிகழ்வை இலங்கையில் நடத்துவதற்கு இரத்மலானை ஸ்டைன் கலையகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்