விடுவிக்கப்பட்ட காணி ஆவணங்கள் ஒப்படைப்பு: தொடர்ந்தும் பரவிபாஞ்சான் மக்கள் போராட்டம்

விடுவிக்கப்பட்ட காணி ஆவணங்கள் ஒப்படைப்பு: தொடர்ந்தும் பரவிபாஞ்சான் மக்கள் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 10:22 pm

இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட ஒரு தொகுதி காணியின் ஆவணங்கள் மாவட்ட செயலகத்தினால் ஆராயப்பட்டு, மீள்குடியேறுவதற்காக பரவிபாஞ்சான் மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டன.

இந்நிலையில், தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெற்றது.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 17 ஏக்கர் காணியை விடுவிக்கக்கோரி, கடந்த மாதம் 13 ஆம் திகதி பரவிபாஞ்சான் மக்கள் தொடர் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஆரம்பித்ததை அடுத்து, சுமார் ஏழரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களின் ஆவணங்கள் ஆராயப்பட்டு ஐவருக்கான காணிகள் மாவட்ட செயலகத்தினால் இன்று கையளிக்கப்பட்டன.​

இதேவேளை, இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான ஆவணங்கள் தம்மிடமுள்ள போதிலும், காணிகள் தம்மிடம் ஒப்படைக்கப்படவில்லை என பரவிபாஞ்சான் மக்களின் ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்