வவுனியா, கிளிநொச்சி பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது

வவுனியா, கிளிநொச்சி பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது

வவுனியா, கிளிநொச்சி பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2016 | 1:46 pm

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துவந்த நிலையில் விசேட குழுவொன்றின் மூலம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்களால் திருடப்பட்ட தங்க நகைகள், இலத்திரனியல் உபகரணங்கள், வாள், கத்தி, துப்பாக்கி மற்றும் இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களால் திருடப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்தவர்களும் கைதுசெய்யப்பட்டவர்களில் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்