முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதா என ஆராயும் பரிசோதனை முன்னெடுப்பு

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதா என ஆராயும் பரிசோதனை முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 8:32 pm

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயும் பரிசோதனை இன்று முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது.

வட மாகாண சுகாதார அமைச்சினால் இந்த மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவில் 8 மணியளவில் மருத்துவப் பரிசோதனைகள் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் 11 மணியளவிலேயே மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

5 பேர் மாத்திரமே இன்றைய தினத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் கலந்து கொண்டிருந்ததாக அங்கிருக்கும் நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்