முகாம்களிலுள்ளவர்களின் காணிகளை 3 மாதங்களுக்குள் கையளிப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

முகாம்களிலுள்ளவர்களின் காணிகளை 3 மாதங்களுக்குள் கையளிப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 10:06 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்தார்.

இதன்போது, தற்போதைய அரசியல் விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் உத்தியோகப்பூர்வ விஜயத்தின்போது, தம்மை சந்தித்து ஐ.நா. செயலாளர் நாயகம் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவூட்டினார்.

மேலும், வடக்கில் முகாம்களிலுள்ள அனைவரின் காணிகளையும் 3 மாதங்களுக்குள் கையளிப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்