பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 12 பேர் பலி

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 12 பேர் பலி

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 12 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 4:31 pm

பாகிஸ்தானின் வட பகுதியிலுள்ள நீதிமன்றம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் மர்டன் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தினுள் நுழைந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய பின்னர், உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளையும் வெடிக்கச் செய்துள்ளனர்.

இந்த இரட்டைத் தாக்குதலில் சட்டத்தரணிகள், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என 12 பேர் பலியாகினர்.

காயமடைந்த 50 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு ஜமாத்-உர்-அஹ்ரார் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்