நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு: மூன்று சந்தேகநபர்களின்றி விசாரணை முன்னெடுப்பு

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு: மூன்று சந்தேகநபர்களின்றி விசாரணை முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 7:13 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் மூன்று சந்தேகநபர்களின்றி வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 6 பேரில் மூன்று பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அதற்கமைய, இன்று ஆஜராகியிருந்த மூன்று குற்றவாளிகளை மாத்திரம் வைத்து, வழக்கினை விசாரணை செய்வதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க தீர்மானித்தார்.

சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் இதற்கு முன்னர் மேல் முறையீடு ஒன்றை செய்திருந்தார்.

மேலும், இந்த வழக்கை ஜூரிகள் சபையில் விசாரணை செய்யுமாறு பிரதிவாதிகள் கோரியிருந்த போதிலும், மனுதாரர்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

எனினும், இந்த வழக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேல் நீதிமன்ற நீதிபதி இருதரப்பிற்கும் தெரிவித்தார்.

அன்றைய தினம் ஜூரிகள் சபை தொடர்பிலும் தீர்ப்பு வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்