தொடரும் பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

தொடரும் பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

தொடரும் பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2016 | 1:21 pm

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் மேற்கொண்டு வந்த தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் கடந்த மாதம் 17 ஆம் திகதி தற்காலிகமாக கைவிடப்பட்டது.

எனினும் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இரணுவக் கட்டுப்பாட்டில் உள்ள எஞ்சிய காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று முன்தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்