ஜாக்கிச்சானுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு

ஜாக்கிச்சானுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு

ஜாக்கிச்சானுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 3:43 pm

சீன திரைப்பட நடிகர் ஜாக்கிச்சானுக்கு (Jackie Chan) ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹொங்காங்கில் பிறந்த 62 வயதான ஜாக்கிச்சான், சீன திரைப்படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

அதன் மூலம் ஹொலிவுட் திரைப்படங்களில் காலடி வைத்து ரஷ் ஹவர், கராத்தே கிட் போன்ற திரைப்படங்களால் புகழ்பெற்றவர்.

30 திரைப்படங்களை இயக்கியுள்ள ஜாக்கிச்சானுக்கு திரைத்துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி ஆஸ்கர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை THE ACADEMY OF MOTION PICTURE ARTS AND SCIENCE அமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஜாக்கிச்சானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்