ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஊடுருவிய சந்தேகநபர்களுக்கு பிணை

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஊடுருவிய சந்தேகநபர்களுக்கு பிணை

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஊடுருவிய சந்தேகநபர்களுக்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2016 | 12:58 pm

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவி அதன் தரவுகளை மாற்றுவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவனும், இளைஞனும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்ககள் இருவரும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இன்று (02) ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

17 வயதான பாடசாலை மாணவன் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

மற்றைய சந்தேகநபர் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும், 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்