சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை விநியோகிக்கும் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை விநியோகிக்கும் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை விநியோகிக்கும் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2016 | 1:11 pm

வீடுகளுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை விநியோகிக்கும் திட்டத்திற்கான அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பமாகியது.

பத்து இலட்சம் வீடுகளுக்கு சூரிய சக்தியை அறிமுகப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

எரிசக்தியில் தன்னிறைவுடைய நாடாக இலங்கையை மாற்றுவதற்கான இந்த திட்டத்தை மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபை, தேசிய நிலைபெறுதகு எரிசக்தி உள்ளிட்ட நிறுவனங்கள் பலவற்றின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைமுன்னிட்டு நாட்டின் நான்கு பாகங்களில் இருந்தும் எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பு வந்தடையும் வகையில் நியூஸ்பெஸ்டினால் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பிரசார வாகனத் தொடரணிகள் கொழும்பை வந்தடையவுள்ளன.

அதன் பின்னர் சூரிய சக்தி திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் எதிர்வரும் 6 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்