சிவனேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு நிராகரிப்பு

சிவனேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு நிராகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 7:25 pm

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு, மேல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் இல்லை என்ற அடிப்படையில் இந்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு தொடர்பில் தீர்ப்பு வழங்கும் வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, குறித்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டு நீதிபதி விஸ்வலிங்கம் சந்திரமணி, பிணை மனுவை நிராகரித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2008 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்