சிவகார்த்திகேயனுடன் இணையும் சினேகா

சிவகார்த்திகேயனுடன் இணையும் சினேகா

சிவகார்த்திகேயனுடன் இணையும் சினேகா

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2016 | 11:50 am

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரெமோ’.

இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்து, இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது ஒக்டோபர் 7 ஆம் திகதி இப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கவிருக்கும் படத்துக்கு திகதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் நடைபெறவுள்ளது.

நாயகியாக நயன்தாரா, ஃபகத் பாசில், சதீஷ் ஆகியோர் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் இவர்களைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்