கோனகத்தனாவ மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியது மக்கள் சக்தி

கோனகத்தனாவ மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியது மக்கள் சக்தி

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 8:10 pm

கெப்பித்திகொல்லாவ – கோனகத்தனாவ பகுதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நியூஸ்பெஸ்ட்டின் மக்கள் சக்தி இன்று நிறைவேற்றியது.

சிரமத்திற்கு மத்தியில் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் கோனகத்தனாவ உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பல வருடங்களாக நிறைவேற்றப்படாதிருந்த தமது கனவை நனவாக்கிய நியூஸ்பெஸ்ட்டுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 15 ஆம் திகதி கோனகத்தனாவ மக்களுக்கான குடிநீர் திட்டத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

சென்ட்ரல் பெயாரிங்ஸ் மற்றும் இயந்திரங்கள் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை கடற்படையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த குடிநீர்த் திட்டம், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் ஊடாக மக்களிடம் கையளிக்கப்பட்ட 11 ஆவது திட்டம் இதுவாகும்.

இதனை நீண்ட காலம் பாதுகாப்பதற்கு மக்களின் ஒத்துழைப்புடனான மக்கள் செயலணியும் இன்று ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்