கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்தியது சாம்சங்

கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்தியது சாம்சங்

கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்தியது சாம்சங்

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 5:11 pm

பேட்டரிகள் வெடிப்பதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களே கடந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த புதிய ரக மொபைல் போன்களை வாங்கியிருந்தவர்கள் சிலர், சார்ஜ் செய்யும் போது போன் வெடித்துவிட்டதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

ஏற்கனவே கேலக்ஸி 7 ரக போன்களை வாங்கியிருப்பவர்கள் அதற்குப் பதிலாக புதியதொரு ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ள முடியும் என சாம்சங் அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 10 இலட்சம் போன்கள் விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்