அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக ரியான் ஹாரிஸ் நியமனம்

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக ரியான் ஹாரிஸ் நியமனம்

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக ரியான் ஹாரிஸ் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 3:54 pm

முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ், அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு அவர் பந்துவீச்சுப் பயிற்சியாளராகச் செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லேமன், உதவிப் பயிற்சியாளர் டேவிட் சாகர் ஆகியோருடன் இணைந்து அவர் பணிபுரிய உள்ளார்.

ஹாரிஸ், அவுஸ்திரேலிய அணிக்காக 27 டெஸ்டுகள், 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்