யால வன விலங்கு சரணாலயத்தில் சிறுத்தையை கொன்ற நபரை கைது செய்ய நடவடிக்கை

யால வன விலங்கு சரணாலயத்தில் சிறுத்தையை கொன்ற நபரை கைது செய்ய நடவடிக்கை

யால வன விலங்கு சரணாலயத்தில் சிறுத்தையை கொன்ற நபரை கைது செய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2016 | 12:58 pm

யால வன விலங்கு சரணாலயத்தில் சிறுத்தை ஒன்றை கொன்ற சந்தேகநபரை கைது செய்வதற்கு குற்ற புலனாய்வு திணைக்களத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கரம பெரேரா தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக சிறுத்தைகள் அதிகமாக வேட்டையாடப்படுவதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வேட்டயாடப்படும் சிறுத்தைகள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அது குறித்து சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவிள்ளதாகவும் அமைச்சர் காமினி ஜயவிக்கரம பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்