மனிதர்களின் ஆதித்தாய் லூசி: அதிகமான துன்பத்தை அனுபவித்தே இறந்திருக்கிறார்!

மனிதர்களின் ஆதித்தாய் லூசி: அதிகமான துன்பத்தை அனுபவித்தே இறந்திருக்கிறார்!

மனிதர்களின் ஆதித்தாய் லூசி: அதிகமான துன்பத்தை அனுபவித்தே இறந்திருக்கிறார்!

எழுத்தாளர் Bella Dalima

01 Sep, 2016 | 3:43 pm

1974 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் ஓர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அது சுமார் 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஓர் பெண்ணின் எலும்புக்கூடு என ஆய்வுகளில் தெரியவந்தது.

அந்த எலும்புக்கூட்டிற்கு லூசி என பெயரிட்டு, அவர் தான் மனிதர்களின் ஆதித்தாய் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கிடைத்திருக்கும் லூசியின் 40 வீதமான எலும்புகளை வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்றரை அடி உயரமும் 29 கிலோ எடையும் கொண்டவர். சிறிய பாதங்கள், நீளமான கைகள் கொண்ட லூசி, நவீன சிம்பன்ஸியை ஒத்திருக்கிறார்.

மனிதக் குரங்குகளுக்கு மத்தியில் எழுந்து நின்று, நடந்து சென்ற முதல் உயிரினக் கூட்டத்தைச் சேர்ந்தவர் லூசி.

அன்றைய காலகட்டத்தில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள்தான். லூசியும் 20 வயதில்தான் இறந்திருக்கிறார்.
லூசியின் எலும்புகளை வைத்து ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், லூசி மரத்தில் இருந்து வீழ்ந்து இறந்து போயிருக்கலாம் என்கிறார்கள்.

மார்பெலும்புகள், இடுப்பு எலும்புகள், தொடை எலும்புகள், தோள்பட்டை எலும்புகள் ஆகியன மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

அந்தக்காலத்தில் மரங்களில் அதிக நேரம் மனிதர்கள் செலவிட்டிருக்கிறார்கள்.

லூசியும் 40 அடி உயர மரத்திலிருந்து வீழ்ந்து, எலும்புகள் நொறுங்கி இறந்து போயிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

எலும்புகளின் சேதம் அதை உறுதி செய்கிறது. அளவுக்கு அதிகமான துன்பத்தை அனுபவித்தே லூசி இறந்திருக்கிறார்.

ஆதி மனித இனத்தைச் சேர்ந்த இந்த லூசியை வைத்து இன்னும் ஏராளமான விடயங்களை மனித குலம் அறிய வேண்டியிருக்கிறது, என ஆய்வாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

lucy-skeleton-from-apjpg-b80d96fff9e9a9e0


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்