10 வருடங்களின் பின்னர் தகர்க்கப்பட்ட இலங்கை அணியின் சாதனை

10 வருடங்களின் பின்னர் தகர்க்கப்பட்ட இலங்கை அணியின் சாதனை

10 வருடங்களின் பின்னர் தகர்க்கப்பட்ட இலங்கை அணியின் சாதனை

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2016 | 11:19 am

சர்வதேச ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் கடந்த 10 வருடங்களாக இலங்கை அணி தக்கவைத்திருந்த சாதனையை இங்கிலாந்து அணி நேற்றைய தினம் முறியடித்தது.

ஒருநாள் போட்டியில் அணி ஒன்று பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக 444 ஓட்டங்களை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக 9 விக்கெட்டுக்களை இழந்து 443 ஓட்டங்களை பெற்றிருந்தமையே கடந்த 10 வருடங்களில் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களாக காணப்பட்டது.

இங்கிலாந்து சார்பில் அலெக்ஸ் ஹேல்ஸ் 171 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து சார்பில் அதிகூய ஓட்டங்களைப் பெற்ற வீரர் எனும் சாதனையை தன்வசமாக்கினார். அத்துடன் பட்லர் 22 பந்துகளில் அரைச்சதம் கடந்து இங்கிலாந்து சார்பான அதிவேக அரைச்சதத்திற்கு உரிமை கோரினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 275 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 169 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்