வடக்கில் அகதி முகாமிலுள்ள 450 குடும்பங்களுக்கு காணிகள்

வடக்கில் அகதி முகாமிலுள்ள 450 குடும்பங்களுக்கு காணிகள்

வடக்கில் அகதி முகாமிலுள்ள 450 குடும்பங்களுக்கு காணிகள்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2016 | 1:30 pm

வடக்கில் அகதி முகாமிலுள்ள 450 குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்பிரகாரம் குடும்பமொன்றுக்கு தலா 20 பேர்ச்சஸ் காணி வழங்கபடவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

வடக்கில் தற்போது 34 அகதி முகாம்கள் உள்ளதுடன் 971 குடும்பங்கள் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காணிகள் வழங்கப்படும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கமே முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் உதவியையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்தா பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்