ரிஷாட் பதியுதீனிடம் ஜனாதிபதி ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு

ரிஷாட் பதியுதீனிடம் ஜனாதிபதி ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 9:15 pm

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று வாக்குமூலம் பதிவுசெய்தது.

ஆணைக்குழுவிற்கு இன்று முற்பகல் 11 மணியளவில் சமூகமளித்த அமைச்சரிடம், பிற்பகல் 2 மணிவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நேற்று முன்தினமும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைக்கப்பட்டிருந்தார்.

ஆயினும், அன்றைய தினம் அவர் ஆயத்தங்களுடன் வருகை தராமையால் மீண்டும் இன்று அழைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்தது.

2014 ஆம் ஆண்டில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் மற்றும் நிதி மோசடிகள் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பில், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு தீர்மானித்ததாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

பாரிய ஊழல் மோசடிகள், அரசாங்க வளங்கள், சிறப்புரிமைகள், அதிகாரம் மற்றும் அதிகார சபை என்பவற்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்