பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரருக்கு பிணை

பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரருக்கு பிணை

பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரருக்கு பிணை

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 7:45 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரன் பூபாலப்பிள்ளை ஹரன் ஆகியோருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பிணை வழங்குவதற்கான அனுமதியை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் வழங்கியதை அடுத்து, நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, நீதவான் நீதிமன்றத்தில் பிணைப்பத்திரங்களும் பணமும் செலுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா இரண்டு சரீரப் பிணைகளிலும் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிக்கு இடையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும், வழக்கு விசாரணை முடிவடையும் வரை வெளிநாடு செல்ல முடியாதெனவும் பிணை நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி மட்டக்களப்பு ஆரையம்பதியில் பாடசாலை ஆசிரியர் மற்றும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் பூபாலப்பிள்ளை ஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களாக விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்