பினராயி விஜயன் இன்னொரு மாநில முதல்வர் அல்லர், அவர் என் மாநில முதல்வர் – கமல் ஹாசன்

பினராயி விஜயன் இன்னொரு மாநில முதல்வர் அல்லர், அவர் என் மாநில முதல்வர் – கமல் ஹாசன்

பினராயி விஜயன் இன்னொரு மாநில முதல்வர் அல்லர், அவர் என் மாநில முதல்வர் – கமல் ஹாசன்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 3:23 pm

உலகின் பல பகுதிகளிலுமுள்ள முன்னோடி மனிதர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் செவாலியே விருதை வழங்கி வருகிறது.

1957 ஆம் முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை கமல் ஹாசனுக்கு வழங்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.

நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என சினிமாவில் சகல துறைகளிலும் தடம் பதித்தவர் கமல்.

அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகள் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கமல் ஹாசன் செவாலியே விருதுக்குத் தேர்வானது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதில் கடிதம் எழுதியுள்ள கமல் கூறியிருப்பதாவது:

”உங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. இன்னொரு மாநில முதல்வர் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தது குறித்து ஒருவர் ஆச்சரியப்பட்டார். அவருக்கு நான் சொன்னேன், பினராயி விஜயன் இன்னொரு மாநில முதல்வர் அல்லர். அவர் என் மாநில முதல்வர். சினிமா பார்க்கும் எந்தவொரு மலையாளியிடமும் கேட்டுப்பாருங்கள், நான் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று’

என கமல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்