பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2016 | 9:02 am

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன.

எவ்வறாயினும் உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் இடம்பெறும் 35 பாடசாலைகள் இன்று திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரப்ரீட்சை வினாத்தாள்களை திருத்தும் மத்திய நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் பாடசாலைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு யாழ் குடாநாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வழங்கப்படவுள்ள விடுமுறைக்கு பதிலாக, எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நடத்தப்படும் எனவும் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்