பரவிபாஞ்சானில் 3 ஏக்கர் காணி விடுவிப்பு; மக்கள் மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம்

பரவிபாஞ்சானில் 3 ஏக்கர் காணி விடுவிப்பு; மக்கள் மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 8:32 pm

கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த காணியில் ஒரு பகுதி இன்று விடுவிக்கப்பட்டது.

எனினும், எதிர்க்கட்சித் தலைவரின் வாக்குறுதிக்கு அமைய, தமது காணி முழுமையாக விடுவிக்கப்படவில்லை என தெரிவித்து, பரவிபாஞ்சான் மக்கள் இன்று முதல் மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த, பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் காணி இன்றைய தினம் விடுவிக்கப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்