பப்புவா நியூ கினியாவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 3:00 pm

பப்புவா நியூ கினியாவில் உள்ள ராபவுலில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

நியூ பிரிட்டன் தீவில் இருந்து வடகிழக்கே சுமார் 89 கிலோமீட்டர் தூரத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கமானது, பப்புவா நியூ கினியாவின் ராபவுல் நகரத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பசுபிக் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்