நல்லூரான் நந்தவனத்தில் திரைப்பரீட்சை: தெரிவான மூவருக்கு செய்தி வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது

நல்லூரான் நந்தவனத்தில் திரைப்பரீட்சை: தெரிவான மூவருக்கு செய்தி வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 8:44 pm

திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்க நியூஸ்பெஸ்ட் எப்போதும் தயாராக உள்ளது.

அதன் ஒரு கட்டமாக செய்தி வாசிக்கும் திறமையுடைய மூவருக்கான அங்கீகாரத்திற்கு நியூஸ்பெஸ்ட் இன்று களம் அமைத்துக் கொடுத்தது.

நல்லைக்கந்தனின் சந்நிதானத்தில் அமைக்கப்பட்ட நல்லூரான் நந்தவனத்தில் திரைப்பரீட்சை மற்றும் குரல்தேர்வு ஆகியன நடைபெற்றன.

தமது திறமைகளை வெளிக்கொணர்வதற்காக நியூஸ்பெஸ்ட்டின் நல்லூரான் நந்தவனத்திற்கு பலர் வருகை தந்திருந்த போதிலும் மூவருக்கு மாத்திரம் வானலைகளில் வலம் வருவதற்கான அரிய சந்தர்ப்பம் கிட்டியது.

நியூஸ்பெஸ்ட்டின் நல்லூரான் நந்தவனம் விசேட கலையகத்தில் நடத்தப்பட்ட திரைப்பரீட்சை குரல் தேர்வினூடாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு செய்தி வாசிக்கும் வாய்ப்பு இன்று கிட்டியது.

நியூஸ்பெஸ்ட்டின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக கிளிநொச்சி – பளை மாசார் பகுதியைச் சேர்ந்த துவாரகன் சஞ்ஜிதா தெரிவு செய்யப்பட்டார்.

இவர் பளை மத்திய கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி பயின்று தற்போது தாதியர் பயிற்சி நெறியை மேற்கொண்டு வருகின்றார்.

நியூஸ்பெஸ்ட்டின் 5.25 மணித்தியாலச் செய்தியை நேரலையாக வாசிப்பதற்கான அரிய சந்தர்ப்பம் இவருக்கு கிடைத்தது.

இதேவேளை, நியூஸ்பெஸ்ட்டின் வானொலி மணித்தியாலச் செய்தியை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் யாழ் – காரைநகரைச் சேர்ந்த மிரோஜா கோமளேஸ்வரனுக்குக் கிடைத்தது.

இவர் யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி பயின்று, தற்போது விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார்.

நியூஸ்பெஸ்ட்டின் வானலைகளில் செய்தி வாசிப்பாளராக வலம் வருவதற்கான மற்றுமொரு அரிய சந்தர்ப்பம் வவுனியாவைச் சேர்ந்த நிரோஜினி வில்கின்சனுக்குக் கிடைத்தது.

இவர் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பிரிவில் கல்வி பயின்று வருகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்