ஜப்பானில் உள்ள முதியோர் இல்லத்திலிருந்து 9 சடலங்கள் மீட்பு

ஜப்பானில் உள்ள முதியோர் இல்லத்திலிருந்து 9 சடலங்கள் மீட்பு

ஜப்பானில் உள்ள முதியோர் இல்லத்திலிருந்து 9 சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 5:08 pm

சூறாவளித் தாக்கத்திற்கு இலக்கான ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றிலிருந்து 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

லயன் ரோக் எனப்படும் சூறாவளி காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் வாய்ஸுமி நகரில் உள்ள முதியவர்கள் தங்கும் விடுதிக் கட்டடம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புண்டு என்ற அச்சத்தால், அப்பகுதிகளில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனாலும், ஒரு நதி அருகேயுள்ள குறித்த முதியோர் நல இல்லத்தில் உள்ளவர்கள் ஏன் வெளியேற்றப்படவில்லை என்பது தெரியவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்