கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட எண்மருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்

கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட எண்மருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்

கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட எண்மருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 4:00 pm

அவன்ற் கார்ட் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத்தாக்கல் செய்துள்ளது.

வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏனைய 7 பேரில் அவன்ற் கார்ட் நிறுவன தலைவர் நிஷங்க சேனாதிபதியும் அடங்குகின்றார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்னவுக்கு எதிராகவும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படை தளபதிகளான சோமதிலக்க திஸாநாயக்க, ஜயநாத் கொலம்பகே மற்றும் ஜயந்த பெரேரா ஆகியோருக்கு எதிராகவும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அத்துடன், ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.டி எகொடவில மற்றும் முன்னாள் தலைவர் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத்தாக்கல் செய்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்